Thursday, April 3, 2008
Sub orbital spaceflight
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஒரு மணி நேர விமான பயணம் - இது நடைமுறை சாத்தியமா? செவ்வாய் கிரகத்திர்கே மனிதனை அனுப்பலாமா என்று சிந்திக்கும் நிலையில் இருக்கும் அறிவியல் அறிஞர்கள் இதனைப் பற்றி மட்டும் சிந்திக்காமலா இருப்பார்கள் ? இந்த நூற்றாண்டில் இது சாத்தியப்படும் . அந்த தொழில்நுட்பத்துக்கு பெயர் Sub-orbital spaceflight.
Sub-orbital spaceflight என்றால் என்ன?
இதனை தெரிந்து கொள்வதற்கு முன் நாம் சில விசயங்களை அறிந்து கொள்வது நலம். நமது காற்று மண்டலம் என்பது கடல் மட்டத்தில் இருந்து 100 K.M உயரம் வரை மட்டுமே . அதற்கு மேல் காற்று என்பது கிடையாது. விமானங்கள் எல்லாம் இந்த எல்லைக்குள் தான் பறக்கின்றன. நாம் விமானத்தில் பயணிக்கும் போது பூமியின் ஈர்ப்பில் பாதுகாப்பாக இருக்கின்றோம்.
Sub-orbital spaceflight தொழில் நுட்பம் சற்று வித்தியாசமானது. இதில் விமானமானது Rocket போன்று விண்ணை கிழித்து 100 K.M உயரத்திற்கு அப்பால் செல்லும் , புவி ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு பின்னர் எந்த நாட்டில் இறங்க வேண்டுமோ அதற்கு தேவையான கோண அளவில் drop செய்யப்படும். புவியின் ஈர்ப்பு விசயானது flight -ஈர்க்கும் , இதன் மூலம் விமானம் பறக்காமலேயே புவியின் சுழற்சியை உபயோகித்து ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்திற்கு வெகு விரைவாக சென்றுவிடும்.
மேலே படித்த தொழில்நுட்பம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றலாம் ஆனால் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவை என்ன என்பதை காண்போம்.
1. புவியில் இருந்து 100 K.M உயரத்திற்கு மேலே செல்ல 3 முதல் 5 நிமிடம் ஆகும்.
2. பின்னர் மீண்டும் புவியை அடைய (free-fall) சுமார் 25 நிமிடங்கள் ஆகும் . ஆனால் காற்று மண்டலத்தில் நுழையும் போது ஏற்படும் உராய்வு அதிக வெப்பத்தை உருவாக்கும் , இதனை சமாளிக்கும் திறன் கொண்ட விமானங்களை நமது விங்கானிகள் உருவாக்கினால் மட்டுமே இந்த தொழில் நுட்பம் சாத்தியப்படும். மேலும் அது re usable ஆக இருக்க வேண்டும்.
3. பயணிகளுக்கு ஒரு பிரச்சனை உண்டு , புவியின் orbit க்கு அப்பால் இருக்கும் போது ஈர்ப்பு விசை கிடையாது(the passengers will experience weightlessness) , Oxygen இருக்காது , மேலும் இதனை சமாளிக்கும் மன திடம் வேண்டும்.
கண்டிப்பாக இப்படி ஒரு அறிவியல் விந்தை நடக்கும் - நமது காலத்திலோ அல்லது நமது சந்ததியர் காலத்திலோ!
மேலும் தெரிந்து கொள்ள கீழ்காணும் வலை தளங்களில் அலசவும்:
100 km. ALTITUDE BOUNDARY FOR ASTRONAUTICS...
Nasa web Site
அடுத்த வலைப்பதிவில் சந்திப்போம் . நன்றி !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment